×

தூத்துக்குடியில் டாஸ்மாக் பாரில் கொள்ளை

தூத்துக்குடி, நவ.12: தூத்துக்குடியில் டாஸ்மாக் பாரில் கொள்ளையில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி-மதுரை பைபாஸ் ரோட்டில் மடத்தூர் பகுதியில் டாஸ்மாக் மதுபான கடை இயங்கி வருகிறது. இந்த டாஸ்மாக் கடையை ஒட்டி பார் செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் இரவு இந்த பாரை வழக்கம் போல் பூட்டிவிட்டு சென்றார்கள். நேற்று காலையில் மீண்டும் பாரை திறக்க வந்த போது, பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. பாரில் வைத்து இருந்த ₹4 ஆயிரம் மதிப்புள்ள சிகரெட், ₹3 ஆயிரத்து 500 ரொக்கப்பணம் ஆகியவற்றை மர்ம ஆசாமி திருடி சென்று இருப்பது தெரியவந்தது. அதே போன்று அங்கு இருந்த கண்காணிப்பு கேமிராவை சேதப்படுத்திவிட்டு, ஹார்டு டிஸ்கையும் எடுத்து சென்று விட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

The post தூத்துக்குடியில் டாஸ்மாக் பாரில் கொள்ளை appeared first on Dinakaran.

Tags : Tasmac Bar ,Tuticorin ,Thoothukudi ,Tasmac Liquor ,Madathur ,Thoothukudi-Madurai ,Tasmac ,Dinakaran ,
× RELATED நிதி நிறுவன ஊழியரை தாக்கிய வாலிபர் கைது