- சிகை அலங்காரம்
- தொழிலாளர்கள் சங்கம்
- செங்கல்பட்டு
- டாக்டர்கள் சமூக நல சங்கம்
- முடி திருத்தும் தொழிலாளர்கள் சங்கம்
- தமிழ்நாடு டாக்டர்கள் சமூக நல சங்கம்
- ஜெகதீசன்
- யூனியன்
- தின மலர்
செங்கல்பட்டு: மருத்துவர் சமூக நலச்சங்கம், முடி திருத்தும் தொழிலாளர் நலச்சங்கம் ஆலோசனை கூட்டம் செங்கல்பட்டில் நடந்தது. தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச்சங்கம், முடி திருத்தும் தொழிலாளர் நலச்சங்கம் சார்பில் செங்கல்பட்டில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், மாவட்ட தலைவர் ஜெகதீசன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக மாநில துணை தலைவர் கணேசன் கலந்துக்கொண்டார். மாவட்ட செயலாளர் கோபு வரவேற்புரை வழங்கினார். இதில், வரும் 24ம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஒன்றிய அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற இருப்பதை முன்னிட்டு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
மேலும் அன்று தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து சலூன் கடைகளை அடைத்து சென்னையில் நடைபெறும் ஆர்பாட்டத்தில் அனைவரும் கலந்துக்கொள்வது குறித்தும் முடிவெடுக்கப்பட்டது. இதற்கு முன்னதாக தியாகி விஸ்வநாததாஸ் 84வது நினைவு தினத்தை முன்னிட்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர், மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு மவுன அஞ்சலி செலுத்தினர். சென்னையில் 24ம் தேதி நடைபெறும் ஆர்பாட்டத்தில் செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்துகொள்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
The post முடி திருத்தும் தொழிலாளர் சங்க ஆலோசனை கூட்டம் appeared first on Dinakaran.