செங்கல்பட்டு: மாமண்டூர் அருகே கம்பிகளை ஏற்றி சென்ற லாரி கட்டுப்பாட்டை இழந்ததில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால், சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியில் இருந்து சுமார் 25 டன் எடை கொண்ட இரும்பு கம்பிகளை ஏற்றிக்கொண்ட லாரி ஒன்று சேலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்பொழுது செங்கல்பட்டு மாவட்டம் மாமண்டூர் அடுத்த இருங்குன்றபள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலை இடையே ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்ததில் சுமார் மாலை 5 மணி அளவில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் லாரியில் இருந்த இரும்பு கம்பிகள் சிதறி தேசிய நெடுஞ்சாலையில் விழுந்த நிலையில் ஓட்டுனர் அதிர்ஷ்டவசமாக சிறுக்காயம் இன்றி உயிர் தப்பினார். இதன் காரணமாக மேலும், புத்தாண்டு மற்றும் பள்ளி அரையாண்டு விடுமுறை முடிந்து தென் மாவட்டத்தில் இருந்து சென்னை நோக்கி படையெடுத்து பைக், கார் மற்றும் இதர வாகனங்களில் வந்த மக்கள் இருங்குன்றபள்ளி முதல் சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் ஆமை வேகத்தில் சென்று கொண்டிருந்தது. இதனை தொடர்ந்து, கவிழ்ந்த லாரியை கிரேன் உதவியுடன் சுமார் இரண்டு மணி நேரத்துக்கு பிறகு போலீசார் மீட்டு அப்புறப்படுத்தினர். இதனை தொடர்ந்து போக்குவரத்து சரிசெய்யப்பட்டது.
The post மாமண்டூர் அருகே பரபரப்பு கம்பி லோடு ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்து விபத்து: போக்குவரத்து கடும் பாதிப்பு appeared first on Dinakaran.