×

சாலையோர ஆக்கிரமிப்புகள் இடித்து அகற்றம்

ராசிபுரம், நவ. 10: வெண்ணந்தூர் அருகே, வெள்ளை பிள்ளையார் கோயில் பகுதியில் சாலையோரம் நீட்டிக்கப்பட்டு இருந்த ஆக்கிரமிப்புகளை பொக்லைன் இயந்திரம் மூலம் அதிகாரிகள் இடித்து அகற்றினர். நாமக்கல் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டத்திற்கு உட்பட்ட ராசிபுரம் நெடுஞ்சாலை உட்கோட்டத்தில், ஆட்டையாம்பட்டி பிரிவு சாலையில் இருந்து, வெண்ணந்தூர் செல்லும் பிரதான சாலையில், அலவாய்பட்டி சாலை சந்திப்பில் நெடுஞ் சாலைத்துறை எல்லையில் சிறு கடைகள் மற்றும் தற்காலிக கடைகள் வைத்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது. கடைகளை நீட்டிப்பு செய்து இருந்ததால், சாலை சந்திப்பு குறுகலாகவும், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, இப்பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டது. இதையடுத்து சாலை சந்திப்பினை மேம்பாடு செய்ய உத்தேசிக்கப்பட்டு, சாலை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் அகலப்படுத்தும் பணி மேற்கொள்ள முடிவு செய்தனர். நேற்று வெள்ளை பிள்ளையார் கோயில் பகுதியில், சாலையோரம் இருந்த நீட்டிக்கப்பட்ட ஆக்கிரமிப்பு கடைகளை பொக்லைன் இயந்திரம் மூலம் அதிகாரிகள் இடித்து அகற்றினர்.

The post சாலையோர ஆக்கிரமிப்புகள் இடித்து அகற்றம் appeared first on Dinakaran.

Tags : Rasipuram ,Veliya Pilliyar temple ,Vennanthur ,Attayampatti ,Rasipuram Highway ,Namakkal Highway Department ,Dinakaran ,
× RELATED ராசிபுரம் அருகே மளிகை கடையில் குட்கா...