கஞ்சா விற்ற 2 பேர் கைது

 

திருப்பூர், நவ.5: திருப்பூர் வடக்கு போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவல் அடிப்படையில் போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது சூசையாபுரம் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த வாலிபரிடம் விசாரணை மேற்கொண்டனர். போலீசார் விசாரணையில் அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார். தொடர்ந்து அவரிடம் இருந்த பையை சோதனை செய்தனர். அதில் 1100 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

தொடர்ந்து விசாரணையில் அவர் பீகார் மாநிலத்தை சேர்ந்த ராஜீவ் ஜெய்ஸ்வால் (30) என்பதும், அவர் அப்பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. தொடர்ந்து வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜீவ் ஜெய்ஸ்வாலை கைது செய்தனர். மேலும், அவர் விற்பனைக்காக வைத்திருந்த 1,100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். அதேபோல், கல்லம்பாளையம் பொதுக்கழிப்பிடம் அருகில் கஞ்சா விற்பனை செய்த ரஹீம் (26) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து 1,070 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

The post கஞ்சா விற்ற 2 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: