×

மறைந்த திமுக உறுப்பினர்கள் குடும்பத்துக்கு குடும்ப நல நிதி

 

ராசிபுரம், நவ.5: நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சார்பில், மறைந்த திமுக உறுப்பினர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகளின் குடும்பத்தாருக்கும், கலைஞர் குடும்ப நல நிதி வழங்கப்பட்டு வருகிறது. ராசிபுரம் ஒன்றியம், பிள்ளாநல்லூர், பட்டணம் ஆகிய பேரூர் பகுதிகளில், கடந்த ஏப்ரல் 2024 முதல் தற்போது வரை மறைந்த 65 திமுக உறுப்பினர்களின் குடும்பத்துக்கு நிதி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக மறைந்த திமுக உறுப்பினர்களின் படத்திற்கு, நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜேஷ்குமார் எம்பி., மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.

அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்த அவர், கலைஞர் குடும்ப நல நிதியை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், ராசிபுரம் ஒன்றிய திமுக செயலாளர் ஜெகநாதன், பேரூர் திமுக செயலாளர்கள் நல்லதம்பி, சுப்ரமணியம், ஒன்றிய அவைத்தலைவர் வெங்கடாசலம், அருளரசன், ரங்கசாமி, ரவி, சத்யசீலன், சித்தார்த், கிருபாகரன், சிவக்குமார், கண்ணன், ரவி, பன்னீர்செல்வம், பரிதி, சிவசேகரன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

The post மறைந்த திமுக உறுப்பினர்கள் குடும்பத்துக்கு குடும்ப நல நிதி appeared first on Dinakaran.

Tags : DMK ,Rasipuram ,Namakkal East District DMK ,Pillanallur ,Pattanam ,Dinakaran ,
× RELATED ராசிபுரம் அருகே மளிகை கடையில் குட்கா...