மேற்கு பார்த்து அமைந்துள்ள மேல மறைக்காடர் கோயிலில் நேற்று சிவலிங்கத்தின் மீது சூரியஒளி பட்டது. 10 நிமிடம் சிவனை சூரியன் வழிபட்டது. பின்னர் சிவலிங்கத்துக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர், பன்னீர் உள்ளிட்ட 16 திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து மலர்களால் சிவலிங்கம் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை நடந்தது. இதில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர்.
The post வேதை மேல மறைக்காடர் கோயிலில் சிவலிங்கம் மீது சூரிய ஒளி விழும் அரிய நிகழ்வு: திரளான பக்தர்கள் தரிசனம் appeared first on Dinakaran.