சென்னை கடற்கரை மற்றும் தாம்பரம் இடையே மின்சார ரயில்கள் ரத்து

சென்னை: தாம்பரம் பணிமனையில் மேற்கொள்ளப்படும் பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை கடற்கரை மற்றும் தாம்பரம் இடையே இன்று காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. தாம்பரம் பணிமனையில் மேற்கொள்ளப்படும் பணிகள் காரணமாக இரு மார்க்கங்களிலும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகளின் வசதிக்காக பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படும் என போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது. இந்த நேரத்தில் கூடுதலாக 40 சிறப்பு பஸ்களை அறிவித்து எம்டிசி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சென்னையில் மிக முக்கியமான போக்குவரத்து சேவையாக புறநகர் மின்சார ரயில்கள் உள்ளன. அரக்கோணம், வேளச்சேரி ஆகிய ரூட்களில் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டாலும் பீச் – தாம்பரம் இடையேயான ரூட் தான் எப்போதும் படு பிசியாக காணப்படும் வழித்தடமாக உள்ளது. இந்த ரூட்டில் சில நிமிடம் ரயில் தாமதம் ஆனாலும் பயணிகள் கூட்டம் அலைமோதும்.

அலுவலகம் செல்வோர், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ மாணவிகள் என அனைத்து தரப்பினரும் திண்டாடிப்போவார்கள். சிறிது நேரம் பாதிப்பு ஏற்பட்டால் கூட மொத்த சென்னையே ஸ்தம்பித்து விடும் என்று சொல்லும் அளவுக்க்கு பயணிகள் கூட்டம் அலைமோதும். சமீப காலமாக பராமரிப்பு பணிகள் காரணமாக அடிக்கடி ரயில் சேவைகளை தெற்கு ரயில்வே ரத்து செய்து வருகிறது.

இந்த நிலையில் தான் தாம்பரம் பணிமனையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் சென்னை கடற்கரை – தாம்பரம், தாம்பரம் – சென்னை கடற்கரை இடையே மின்சார ரயில் சேவை நாளை ரத்து செய்யபட்டுள்ளது. தாம்பரம் – சென்னை கடற்கரை இடையேயான புறநகர் மின்சார ரயில் சேவை இன்று (ஜனவரி 5 ஆம் தேதி) காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

 

The post சென்னை கடற்கரை மற்றும் தாம்பரம் இடையே மின்சார ரயில்கள் ரத்து appeared first on Dinakaran.

Related Stories: