தீபாவளி சிறு சேமிப்பு திட்டத்தில் ரூ.1.5 கோடி மோசடி பாஜ நிர்வாகி கைது

திருப்பூர்: திருப்பூரில் தீபாவளி சிறு சேமிப்பு திட்டத்தில் ரூ.1.5 கோடி மோசடி செய்த பாஜ நிர்வாகி கைது செய்யப்பட்டார். திருப்பூர், ஊத்துக்குளி ரோடு, பாளையக்காடு பகுதியை சேர்ந்தவர் பிரதாப் சிங் (43). திருப்பூர் வடக்கு தொழில் பிரிவு மண்டல பாஜ செயலாளரான இவர் மண்ணரை சத்யா காலனி பகுதியை சேர்ந்த பாஜ வடக்கு தொழில் பிரிவு மண்டல செயலாளர் செந்தில்குமார் (45) என்பவர் நடத்திய சிட் பண்ட் நிறுவனத்தில் தீபாவளி சிறு சேமிப்பு திட்டத்தில் சேர்ந்தார். பிரதாப் சிங் 53 வாரங்களுக்கு வாரம் ரூ.200 வீதம் மொத்தம் ரூ.10,600 செலுத்தினார்.

பிரதாப் சிங்கின் உறவினர்களும் தீபாவளி சிறு சேமிப்பில் சேர்ந்து ரூ.2.39 லட்சம் செலுத்தியுள்ளனர். இதேபோல் 100க்கும் மேற்பட்டோர் இந்த தீபாவளி சிறு சேமிப்பு திட்டத்தில் சேர்ந்து ரூ.1.5 கோடி வரை பணம் செலுத்தியதாக தெரிகிறது. இந்நிலையில், இந்த பணத்தை திரும்ப கேட்டபோது செந்தில்குமார் இழுத்தடித்து அலுவலகத்தை காலி செய்துவிட்டு தலைமறைவானார். இது குறித்து பிரதாப் சிங் மாநகர மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து செந்தில்குமாரை நேற்று முன்தினம் கைது செய்தனர். இந்த மோசடி சம்பவத்தில் வேறு நபர்களுக்கு தொடர்பு உள்ளதா என விசாரணை நடக்கிறது.

The post தீபாவளி சிறு சேமிப்பு திட்டத்தில் ரூ.1.5 கோடி மோசடி பாஜ நிர்வாகி கைது appeared first on Dinakaran.

Related Stories: