புதிய வீட்டிற்கு சொத்து வரி நிர்ணயிக்க ரூ.30 ஆயிரம் லஞ்சம் பில் கலெக்டர் கைது: பைக்கில் ரூ.1.40 லட்சம் பறிமுதல்

சேலம்: சேலத்தில் புதிதாக கட்டப்பட்ட வீட்டிற்கு சொத்து வரி நிர்ணயம் செய்ய ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மாநகராட்சி பில் கலெக்டரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர். அவரது பைக்கில் இருந்து கணக்கில் வராத ரூ.1.40 லட்சத்தை பறிமுதல் செய்தனர். சேலம் அழகாபுரம் மிட்டாபுதூர் ஆண்டிச்சிநகரை சேர்ந்தவர் ஷாஜூ (32), தொழிலதிபரான இவர் அந்த பகுதியில் புதிதாக வீடு கட்டியுள்ளார்.

அந்த வீட்டிற்கு சொத்து வரி நிர்ணயிக்க மாநகராட்சியின் 5வது வார்டு பில் கலெக்டர் ராஜா (53), ரூ.30 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். இதுபற்றி ஷாஜூ, சேலம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் அளித்தார். போலீசாரின் அறிவுரைப்படி, ரசாயன பவுடர் தடவிய ரூ.30 ஆயிரத்தை ஷாஜூ, அஸ்தம்பட்டி மண்டல அலுவலகத்திற்கு சென்று பில் கலெக்டர் ராஜாவிடம் நேற்று வழங்கினார். அப்போது சாதாரண உடையில் நின்றிருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், ராஜாவை மடக்கிப்பிடித்தனர். வெளியில் நிறுத்தியிருந்த பைக்கில் போலீசார் சோதனை நடத்தி கணக்கில் வராத ரூ.1.40 லட்சத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை கைது செய்தனர்.

The post புதிய வீட்டிற்கு சொத்து வரி நிர்ணயிக்க ரூ.30 ஆயிரம் லஞ்சம் பில் கலெக்டர் கைது: பைக்கில் ரூ.1.40 லட்சம் பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: