சேலம்
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகேயுள்ள பேளூரில் வாரந்தோறும் திங்கட்கிழமை சந்தை நடைபெறுவது வழக்கம். அதன்படி இன்று பேளூர் வாரச்சந்தை கூடியது. இங்கு வாழப்பாடி, பேளூர், அருநூற்று மலை, கருமந்துறை, நெய்யமலை, சந்துமலை உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் இருந்து விவசாயிகள் 1,500 ஆடுகளை விற்பனைக்கு வாகனங்கள் மூலம் கொண்டு வந்தனர். வரும் 31ம்தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதால், சந்தையில் ஆடுகள் விற்பனை அமோகமாக நடந்தது. இங்கு ஆடுகள் எடையை பொறுத்து ரூ.7,000 முதல் ரூ.25,000 வரை விற்பனை ஆனது. சந்தையில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை நடந்ததாக, வியாபாரிகள் தெரிவித்தனர்.
மதுரை
மதுரை மாவட்டம், மேலூரில் இன்று நடந்த ஆட்டுச்சந்தை களைகட்டியது. ஆடுகளின் தரத்திற்கேற்ப ரூ.8 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை விற்பனையானது. இன்று நடந்த சந்தையில் ரூ.2 கோடிக்கு ஆடு, கோழிகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இதேபோல, தேனி மாவட்டம், ஆண்டிபட்டி பேரூராட்சிக்குட்பட்ட சந்தைப்பேட்டை பகுதியில் இன்று ஆட்டுச்சந்தை நடந்தது. தேனி, மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் இருந்து வந்த வியாபாரிகள் ஆடுகளை வாங்கிச் சென்றனர். ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
The post களைகட்டியது தீபாவளி சேல்ஸ்: புதுக்கோட்டை, சேலம், மதுரை, தேனியில் ரூ.8 கோடிக்கு ஆடுகள் விற்பனை appeared first on Dinakaran.