ஐசிடி அகாடமி யூத் டாக் போட்டியில் வென்ற கே.ராமகிருஷ்ணன் பொறியியல் கல்லூரி மாணவிக்கு பாராட்டு

திருச்சி, அக்.26: 2024ம் ஆண்டிற்கான ஐசிடி அகாடமி நடத்தும் யூத் டாக் நிகழ்ச்சி, பொதுவெளியில் மாணவ, மாணவிகளுக்கான பேசும் திறனை மேம்படுத்துவதற்கான போட்டித் தேர்வுகள் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியை சேர்ந்த ஏழு மண்டலத்திலிருந்து 20 ஆயிரதிற்கும் மேற்பட்ட மாணவர்கள் பதிவு செய்திருந்தனர். முதல் கட்ட தேர்வில் ஒவ்வொரு மண்டலத்திலிருந்தும் 100 பேர் இறுதிப்போட்டிக்கு முந்தைய சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஒவ்வொரு மண்டலத்தில் இருந்தும் முதல் ஏழு இடம் பிடித்த மாணவர்கள் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றனர்.

இவர்களுக்கான இறுதிப் போட்டி 23 அக்டோபர் 2024 அன்று கோயம்புத்தூரில் உள்ள கொடிசியா வளாகத்தில் நடைபெற்றது. இந்த இறுதி போட்டியில் திருச்சி மண்டலத்திலிருந்து கே. ராமகிருஷ்ணன் காலேஜ் ஆப் இன்ஜினியரிங், தகவல் தொழில்நுட்பத் துறையில் மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவி எஸ்.திவ்யா இரண்டாம் இடம் பிடித்து வெற்றி பெற்றதை கல்லூரி முதல்வர் முனைவர் டி. நிவாசன், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி முனைவர் ஆர் காமராஜ் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் வாழ்த்தினர்.

The post ஐசிடி அகாடமி யூத் டாக் போட்டியில் வென்ற கே.ராமகிருஷ்ணன் பொறியியல் கல்லூரி மாணவிக்கு பாராட்டு appeared first on Dinakaran.

Related Stories: