லால்குடி, ஜன. 4: லால்குடி ஊராட்சி ஒன்றிய பகுதியில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட அரசு அலுவலக கட்டிடங்களை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே. என். நேரு திறந்து வைத்தார்.
லால்குடி ஊராட்சி ஒன்றியம், பம்பரம்சுத்தி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ₹39.95 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள புதிய ஊராட்சி செயலக கட்டிடத்தையும், ஆங்கரை ஊராட்சியில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ₹17.64 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மைய கட்டிடத்தையும், சிறுமயங்குடி ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித்திட்டத்தின் கீழ் ₹10.95 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய நியாயவிலை கட்டிடத்தையும், பெருவளநல்லூர் ஊராட்சியில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ₹39.95 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள கிராம செயலக கட்டிடத்தையும், தாளக்குடி ஊராட்சி,
கீரமங்கலத்தில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ₹11.97 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மைய கட்டிடத்தையும், ஆதிக்குடி ஊராட்சியில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ₹14 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மைய கட்டிடத்தையும், வாளாடி ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் ₹11.77 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய நியாயவிலை கட்டிடத்தையும், இடையாற்றுமங்கலம் ஊராட்சியில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ₹39.95 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய ஊராட்சி செயலக கட்டிடத்தையும், திருமங்கலம் ஊராட்சியில் நபார்டு திட்டத்தின் கீழ் ₹18.42 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியையும், பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு திறந்து வைத்து வைத்தார்.
விழாவில், மாவட்டஊரக வளர்ச்சி துறை திட்ட இயக்குனர் கங்காதரணி, திமுக மத்திய மாவட்ட கழக செயலாளர் வைரமணி, லால்குடி ஒன்றிய குழு தலைவர் ரவிச்சந்திரன், மாவட்ட கவுன்சிலர்கள் ஆதி நாயகி ரவி, தீபா சுதாகர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அண்ணாதுரை, ஆனந்தகுமார், தாசிதார் முருகன், திமுக ஒன்றிய செயலாளர் சண்முகநாதன், சக்திவேல், நகரமன்ற தலைவர் துரை மாணிக்கம், ஆதிதிராவிடர் நலக்குழு மாவட்ட துணை அமைப்பாளர் பொறியாளர் முருகவேல், புள்ளம்பாடி ஒன்றிய செயலாளர் இளங்கோவன், மற்றும் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் அரசு அலுவலர்கள், திமுக கட்சி நிர்வாகிகள்,கிராம பொது மக்கள் கலந்து கொண்டனர்.
The post லால்குடி ஊராட்சி ஒன்றிய பகுதியில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட அரசு அலுவலக கட்டிடங்கள் அமைச்சர் கே. என். நேரு திறந்து வைத்தார் appeared first on Dinakaran.