திருச்சி, ஜன.5: திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட ஒரு சில பகுதிகளில் ஜன.7ம் தேதி குடிநீர் வினியோகம் ரத்து செய்யப்படுவதாக மாநகராட்சி ஆணையர் சரவணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, திருச்சி கம்பரசம்பேட்டை துணை மின் நிலையத்தில் நாளை (ஜன.6) மாதாந்திர மின் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. இதன் காரணமாக இங்கிருந்து மின் வினியோகம் பெறும் பகுதிகளான கம்பரசம்பேட்டை தலைமை நீர்ப்பணி நிலையம், டர்பன் நீரேற்று நிலையம், பெரியார் நகர் கலெக்டர் வெல் நீரேற்று நிலையம் மற்றும் அய்யாளம்மன் படித்துறை நீரேற்று நிலையம் ஆகிய நீரேற்று நிலையங்களில் நீரேற்றுவதில் தடை ஏற்பட்டுள்ளது.
எனவே இந்த நீரேற்று நிலையங்களில் இருந்து குடிநீர் வினியோகம் பெறும் பகுதிகளான விறகுப்பேட்டை, மரக்கடை, மலைக்கோட்டை, சிந்தாமணி, உறையூர், பாத்திமா நகர், புத்தூர், மங்களம் நகர், செல்வா நகர், பாரதி நகர், சிவா நகர், புத்தூர், ஆனந்தம் நகர், Rainbow நகர், தில்லைநகர், அண்ணா நகர், கண்டோன்மென்ட், காஜாபேட்டை, ஜங்ஷன், கருமண்டபம், ராமலிங்க நகர், உய்யாகொண்டான் மலை, விஸ்வாஸ் நகர், மிளகுபாறை, கல்லாங்காடு, Society Colony, எம்.எம் நகர் மற்றும் தேவதானம், மகாலட்சுமி நகர், சங்கிலியாண்டபுரம், கல்லுக்குழி, அரியமங்கலம் உக்கடை, ஜெகநாதபுரம், திருவெறும்பூர், வள்ளுவர் நகர்,
எல்லக்குடி, ஆலத்தூர், புகழ் நகர், காவேரி நகர், பாரி நகர், சந்தோஷ் நகர் மற்றும் கணேஷ் நகர் ஆகிய மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளுக்கு வழங்கப்படும் குடிநீர் விநியோகம் நாளை மறுநாள் (ஜன.7) ஒருநாள் இருக்காது. ஜன.8 முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் செய்யப்படும். எனவே, பொதுமக்கள் இதனால் ஏற்படும் சிரமத்தை பொறுத்துக் கொள்வதுடன், மாநகராட்சிக்கு உரிய ஒத்துழைப்பு வழங்குமாறும், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறும் திருச்சி மாநகராட்சி ஆணையர் சரவணன் கேட்டுக் கொண்டுள்ளார்.
The post திருச்சி மாநகர பகுதிகளில் ஜன.7ம் தேதி குடிநீர் வினியோகம் ரத்து appeared first on Dinakaran.