மகாராஷ்டிரா தேர்தல் ஒரே நாளில் ரூ.191 கோடி பரிசுப்பொருள் பறிமுதல்: தங்கம்- வைரம் சிக்கியது

மும்பை: மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் ஒரே நாளில் 191 கோடி பரிசுப்பொருட்களை தேர்தல் ஆணையம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மகாராஷ்டிராவில் வரும் நவம்பர் 20ம் தேதியன்று பேரவைத் தேர்தல் நடக்கிறது. அங்கு 24 மணி நேரத்தில் ரூ.52 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதே போல் புனே சாகர் நகர் பகுதியில் 139 கோடி தங்கம், வைர நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தேர்தல் படை சோதனையில் அந்த வழியாக வந்த வேன் ஒன்றை தடுத்து நிறுத்தி அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில், ரூ.139 கோடி மதிப்பிலான தங்கம், வைரம் நகைகள் இருந்தன. பறிமுதல் செய்யப்பட்ட நகைகளுக்கு, புனேவைச் சேர்ந்த நகைக்கடைக்காரர் அமித் மோதக் உரிமை கோரியுள்ளார். ஆனால் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்கு எடுத்துச் செல்லப்பட்டிருக்கலாம் என ஆணையம்விசாரிக்கிறது.

The post மகாராஷ்டிரா தேர்தல் ஒரே நாளில் ரூ.191 கோடி பரிசுப்பொருள் பறிமுதல்: தங்கம்- வைரம் சிக்கியது appeared first on Dinakaran.

Related Stories: