காஷ்மீரில் தொடர் வன்முறை மோடி அரசு முற்றிலும் தோல்வி: ராகுல் காந்தி கடும் தாக்கு

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரில் பாரமுல்லா மாவட்டம் குல்மார்க் பகுதியில் சென்று கொண்டிருந்த ராணுவ வாகனம் மீது தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 2 ராணுவ வீரர்கள் உள்பட 4 பேர் பலியானார்கள். இந்த தாக்குதல் குறித்து மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தன் எக்ஸ் தள பதிவில், “ஜம்மு காஷ்மீரின் குல்மார்க்கில் ராணுவ வாகனம் மீது தீவிரவாதிகள் நடத்திய கோழைத்தனமான தாக்குதலில் துணிச்சலான நம் வீரர்கள் இரண்டு பேர் வீரமரணமடைந்தனர் என்ற செய்தி கேட்டு ஆழ்ந்த துயருற்றேன்.

இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கல்கள். ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு மற்றும் அமைதியை நிலைநாட்டுவதில் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் கொள்கைகள் முற்றிலும் தோல்வி அடைந்து விட்டன. பாஜ அரசின் கூற்றுகளுக்கு மாறாக அங்கு தீவிரவாத தாக்குதல்கள் நீடிக்கின்றன. இந்த தாக்குதல் அரசு ஆபத்தின் நிழலில் இருக்கிறது என்ற நிலையை காட்டுகிறது. அரசாங்கம் உடனடியாக பொறுப்புக்கூறலை மேற்கொள்ள வேண்டும். அங்கு அமைதியை மீட்டெடுத்து, ராணுவ வீரர்கள், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

The post காஷ்மீரில் தொடர் வன்முறை மோடி அரசு முற்றிலும் தோல்வி: ராகுல் காந்தி கடும் தாக்கு appeared first on Dinakaran.

Related Stories: