இதைத் தொடர்ந்து, ஃபாலோ ஆன் பெற்று 2வது இன்னிங்சையும் தொடர்ந்து விளையாடிய டெல்லி அணி 83 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 193 ரன் எடுத்திருந்தபோது ஆட்டம் டிராவில் முடிந்தது. சனத் சங்வான் 83, கேப்டன் ஹிம்மத் சிங் 36, ஜான்டி சித்து 23 ரன் எடுத்தனர். நவ்தீப் (15*), ஹிமான்ஷு (0) ஆட்டமிழக்காமல் இருந்தனர். தமிழ்நாடு பந்துவீச்சில் வாஷிங்டன் 3, அஜித் ராம், சோனு யாதவ் தலா 2, குர்ஜப்னீத் 1 விக்கெட் வீழ்த்தினர். முதல் இன்னிங்ஸ் முன்னிலை அடிப்படையில் தமிழ்நாடு அணிக்கு 3 புள்ளிகள் கிடைத்தன. நூலிழையில் தோல்வியில் இருந்து தப்பிய டெல்லி அணிக்கு 1 புள்ளி கிடைத்தது. 152 ரன் விளாசியதுடன், 2 இன்னிங்சிலும் தலா 3 விக்கெட் வீழ்த்திய வாஷிங்டன் சுந்தர் ஆட்ட நாயகன் விருது பெற்றார். இவர் நியூசிலாந்து அணியுடன் நடக்க உள்ள 2வது மற்றும் 3வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. டி பிரிவில் 10 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கும் தமிழ்நாடு அணி 3வது லீக் ஆட்டத்தில் சத்தீஸ்கர் அணியை சந்திக்கிறது. இப்போட்டி, கோவையில் அக்.26ம் தேதி தொடங்குகிறது.
ரஞ்சி டி பிரிவு புள்ளி பட்டியல்
ரேங்க் அணி போட்டி வெற்றி டிரா தோல்வி புள்ளி
1 தமிழ்நாடு 2 1 1 0 10
2 ரயில்வேஸ் 2 1 1 0 7
3 சண்டிகர் 2 1 0 1 6
4 ஜார்க்கண்ட் 2 0 2 0 6
5 டெல்லி 2 0 2 0 4
6 சத்தீஸ்கர் 2 0 2 0 2
7 அசாம் 2 0 1 1 1
8 சவுராஷ்டிரா 2 0 1 1 1
The post ரஞ்சி கோப்பை லீக் ஆட்டம் தமிழ்நாடு – டெல்லி டிரா: வாஷிங்டன் ஆட்ட நாயகன் appeared first on Dinakaran.