சில்லிபாயிண்ட்…

* டெல்லி அணியுடனான ரஞ்சி கோப்பை எலைட் டி பிரிவு லீக் ஆட்டத்தில், தமிழ்நாடு முதல் இன்னிங்சில் 6 விக்கெட் இழப்புக்கு 674 ரன் குவித்து டிக்ளேர் செய்தது (ஜெகதீசன் 65, சுதர்சன் 213, வாஷிங்டன் 152, ரஞ்சன் பால் 117, சித்தார்த் 66). 2ம் நாள் முடிவில் டெல்லி விக்கெட் இழப்பின்றி 43 ரன் எடுத்துள்ளது.

* புதுச்சேரி அணிக்கு எதிராக பாண்டியில் நடக்கும் ரஞ்சி பி பிரிவு போட்டியில், விதர்பா அணி முதல் இன்னிங்சில் 283 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. 2ம் நாள் முடிவில் புதுச்சேரி 45/1.

* மகாராஷ்டிரா அணியுடனான ரஞ்சி கோப்பை ஏ பிரிவு லீக் ஆட்டத்தில் மும்பை அணி முதல் இன்னிங்சில் 441 ரன் குவித்தது (ஆயுஷ் மாத்ரே 176, ஷ்ரேயாஸ் 142). அடுத்து 315 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய மகாராஷ்டிரா 1 விக்கெட் இழப்புக்கு 142 ரன் எடுத்துள்ளது.

 

The post சில்லிபாயிண்ட்… appeared first on Dinakaran.

Related Stories: