ஒருங்கிணைந்த பொறியியல் பணி முழுமையான சான்றிதழை பதிவேற்றம் செய்ய இறுதி வாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் ஜான் லூயிஸ் கூறியுள்ளதாவது:  தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளில் அடங்கிய முதல்வர் தொழிற்பயிற்சி நிறுவனம், உதவி இயக்குநர் (பயிற்சி) பதவிக்கான காலிப்பணியிடத்தில் நேரடி நியமனம் செய்வதற்கு விண்ணப்பதாரர்களால் பதிவேற்றம் செய்யப்பட்ட சான்றிதழ்கள், சரிபார்ப்புக்கு பின்னர் சில சான்றிதழ்கள் முழுமையாக, சரியாக பதிவேற்றம் செய்யப்படாமல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

எனவே இத்தகைய விண்ணப்பதாரர்கள் வருகிற 27ம் தேதி இரவு 11.59 மணிக்குள் விடுபட்ட மற்றும் முழுமையான சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய இறுதி வாய்ப்பு வழங்கப்படுகிறது. இத்தகவல் விண்ணப்பதாரர்களுக்கு குறுஞ்செய்தி, மின்னஞ்சல் மற்றும் குறிப்பாணை (தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் இணையதளத்தில்) மூலமாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், விண்ணப்பதாரர்கள் அனைவரும் குறிப்பாணையில் தெரிவிக்கப்பட்டுள்ள சான்றிதழ்களை தேர்வாணைய இணையதளத்தில் ஒருமுறை பதிவின் (ஓடிஆர்) வாயிலாக பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள். அவ்வாறு தவறும் பட்சத்தில் அத்தகைய விண்ணப்பதாரர்களின் விண்ணப்பம் முழுவதுமாக நிராகரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

The post ஒருங்கிணைந்த பொறியியல் பணி முழுமையான சான்றிதழை பதிவேற்றம் செய்ய இறுதி வாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: