- கொரியன்
- ரஷ்யா
- உக்ரைன்
- கொரிய உளவியல் துறை
- சியோல்
- வட கொரியா
- தென் கொரிய உளவுத்துறை
- நேட்டோ
- ஐக்கிய மாநிலங்கள்
- வட கொரிய
- தின மலர்
சியோல்: உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு உதவ வட கொரியா தனது படைகளை அனுப்பியுள்ளது என்று தென் கொரிய உளவு துறை தெரிவித்துள்ளது. ரஷ்யா-உக்ரைன் இடையே இரண்டரை ஆண்டுகாலமாக போர் நடந்து வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நேட்டோ நாடுகள் ராணுவ, உதவிகள் அளிக்கின்றன. ஆனால், ரஷ்யாவுக்கு எந்த நாடும் ராணுவ உதவி அளிக்கவில்லை.
இந்த நிலையில்,உக்ரைனை எதிர்த்து போரிட வட கொரியா தனது படை வீரர்களை ரஷ்யாவுக்கு அனுப்பியுள்ளதாக தென் கொரிய உளவு நிறுவனம் தெரிவித்துள்ளது. ரஷ்யாவில் உள்ள உசுரிஸ்க்,கபரோவ்ஸ்க் துறைமுகங்களில் வட கொரிய படைகளின் நடமாட்டம் இருந்ததற்கான ஆதாரமாக செயற்கைகோள் புகைப்படங்களையும் தென்கொரியா வெளியிட்டுள்ளது.
The post உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு உதவும் வட கொரியா படைகள்: தென் கொரிய உளவு துறை தகவல் appeared first on Dinakaran.