தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தருவதாக ரூ.1.75 கோடி மோசடி ஒன்றிய அமைச்சர் பிரகலாத்ஜோஷியின் சகோதரர், சகோதரி மீது வழக்கு

பெங்களூரு: பெங்களூரு பசவேஷ்வரநகர் போலீஸ் நிலையத்தில் சுனிதாசவான் என்பவர் கொடுத்துள்ள புகாரில், எனது கணவர் தயானந்த் புல்சிங் சவான், கடந்த 2018ல் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் விஜயபுரா மாவட்டம், நாகடாண தொகுதியில் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கடந்த 2023ல் நடந்த தேர்தலில் அதே தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இதனிடையில் ஒன்றிய அமைச்சர் பிரகலத்ஜோஷியின் சகோதரர் கோபால் ஜோஷி, சகோதரி விஜயலட்சுமியின் அறிமுகம் கிடைத்தது.

விஜயபுரா தொகுதியில் எனது கணவருக்கு பாஜ சார்பில் சீட் வாங்கி கொடுப்பதாக கோபால் ஜோஷி கூறினார். மேலும் இதற்கு ரூ.5 கோடி கொடுக்க வேண்டும் என்றார். முதல் தவணையாக ரூ.25 லட்சமும் மீதமுள்ள பணத்துக்கு காசசோலையும் கொடுத்தோம். ஆனால் வேட்பாளர் பட்டியலில் எனது கணவர் பெயர் இடம்பெறவில்லை. இது குறித்து கோபால்ஜோஷியிடம் கேட்டபோது, ரூ. 5 கோடிக்கான செக்கை திருப்பி கொடுத்தனர். ரூ.25 லட்சம் ரொக்க பணம் கொடுக்கவில்லை.

அரசிடம் இருந்து டெண்டர் பணம் வரவேண்டி உள்ளதால் 20 நாட்களுக்கு அவசர தேவைக்காக மேலும் ரூ.1.50 கோடியை வாங்கினார். ஆனால், அந்த பணத்தையும் திருப்பி தரவில்லை. கடந்த மாதம் பெங்களூருவில் உள்ள விஜயலட்சுமி வீட்டிற்கு சென்று பணம் கேட்டபோது, என்னையும், எனது கணவரையும் விஜயலட்சுமி, அஜய்ஜோஷி ஆகியோர் கடுமையாக தாக்கினர் என கூறியுள்ளனர்.அதை தொடர்ந்து போலீசார் கோபால்ஜோஷி, விஜயலட்சுமிஜோஷி மற்றும் அஜய்ஜோஷி ஆகியோர் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

The post தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தருவதாக ரூ.1.75 கோடி மோசடி ஒன்றிய அமைச்சர் பிரகலாத்ஜோஷியின் சகோதரர், சகோதரி மீது வழக்கு appeared first on Dinakaran.

Related Stories: