நியூசிலாந்துடன் படுதோல்வி; சீனியர்கள் பொறுப்பை உணர்ந்து விளையாட வேண்டும்: பாக். கேப்டன் பாத்திமா பேட்டி

மும்பை : மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட்டில் நேற்று நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 6 விக்கெட் இழப்பிற்கு 110 ரன்கள் எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி 56 ரன்களில் சுருண்டு படுதோல்வி அடைந்தது. கேப்டன் பாத்திமா சனா மட்டும் அதிகபட்சமாக 21 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்பை இந்தியா இழந்தது. நியூசிலாந்து அரை இறுதிச்சுற்றுக்கு ஜோராக முன்னேறியது.

போட்டிக்கு பின் பாத்திமா கூறுகையில், “நாங்கள் எப்போதும் பந்துவீச்சில் சிறப்பாகவே செயல்படுவோம். நேற்றைய போட்டியிலும் நன்றாகவே பந்துவீசினோம். ஆனால் பேட்டிங் மற்றும் பீல்டிங்கில் மிக மோசமாக செயல்பட்டோம். பல எளிய கேட்சுகளை தவற விட்டதால் நியூசிலாந்து அணி 100 ரன்களுக்கு மேல் குவித்தது. பந்துவீச்சுக்கு சாதகமான இந்த ஆடுகளத்தில் என்னதான் நன்றாக பந்துவீசினாலும் பேட்டிங்கிலும் பொறுப்பாக ஆடியிருக்க வேண்டும். ஆனால் நாங்கள் அதை செய்யவில்லை. மகளிர் கிரிக்கெட்டுக்கு உரிய தகுதி எங்களிடம் இல்லை.

எங்கள் அணியின் சீனியர்கள் தங்களது பொறுப்பை உணர்ந்து விளையாட வேண்டும். இதுபோன்ற முக்கியமான போட்டிகளில் அவர்கள் ரன் குவிக்க வேண்டியது அவசியம். பேட்டிங் மற்றும் பீல்டிங்கில் நாங்கள் முன்னேற்றம் காண முயற்சிக்க வேண்டும். இல்லையென்றால் மகளிர் கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணியால் தாக்குப்பிடிக்க முடியாது. எனவே இந்த தோல்வியை ஒரு பாடமாக பாகிஸ்தான் வீராங்கனைகள் எடுத்துக் கொள்ள வேண்டும்’’ என்றார்.

The post நியூசிலாந்துடன் படுதோல்வி; சீனியர்கள் பொறுப்பை உணர்ந்து விளையாட வேண்டும்: பாக். கேப்டன் பாத்திமா பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: