ஆசிய கோப்பை டி20

அல் அமீரத்: வளரும் இளம் வீரர்களுக்கான ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி இன்று ஓமனில் உள்ள அல்அமீரத் நகரில் தொடங்குகிறது. இதில் பங்கேற்கும் 8 நாடுகளில் ஏ அணிகளும் தலா 4 அணிகள் கொண்ட 2பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் மோத உள்ளன. இதன் ஏ பிரிவில் அணிகள் வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங், இலங்கை ஆகிய நாடுகளும், பி பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் ஆகிய நாடுகளும் பங்கேற்கின்றன. இன்று நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் ஏ பிரிவில் உள்ள வங்கதேசம்-ஹாங்காங் அணிகள் மோதுகின்றன. இந்தியா ஏ நாளை பாகிஸ்தான் ஏ அணியுடன் மோத உள்ளது.

இந்தியா ஏ அணி: திலக் வர்மா(கேப்டன்), பிரப்சிம்ரன் சிங், அனுஜ் ரவத்(விக்கெட் கீப்பர்கள்), ரமன்தீப் சிங், நேஹல் வதேரா, நிஷாந்த் சிந்து, ஆயுஷ் பதானி, அபிஷேக் சர்மா, ஹிரிதிக் ஷோகீன், ரவிசீனிவாசன் சாய்கிஷோர், வைபவ் அரோரா, ராகுல் சாஹர், அகிப் கான், அன்சுல் காம்போஜ், ரஷீக் தர் சலாம்.

The post ஆசிய கோப்பை டி20 appeared first on Dinakaran.

Related Stories: