மாணவர் கொலை வழக்கில் கைதான பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 5 பேர் நீக்கம்!!

சென்னை: மாநிலக் கல்லூரி மாணவர் சுந்தர் கொலை வழக்கில் கைதான பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 5 பேர் நீக்கப்பட்டுள்ளனர். மாணவர்கள் சந்துரு, யுவராஜ், ஈஸ்வர், ஹரி பிரசாத், கமலேஸ்வரன் ஆகியோர் கல்லூரியில் இருந்து நீக்கப்பட்டனர். போலீஸ் சமர்ப்பித்த அறிக்கையின்படி, மாணவர்கள் 5 பேரையும் கல்லூரியில் இருந்து நீக்கி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. 5 பேரும் பெரியமேடு போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

The post மாணவர் கொலை வழக்கில் கைதான பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 5 பேர் நீக்கம்!! appeared first on Dinakaran.

Related Stories: