சிறுகமணி வேளாண் அறிவியல் நிலையத்தில் மாடித்தோட்டம் அமைப்பது எப்படி?

 

திருச்சி. அக்.10: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் திருச்சி மாவட்டம், சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலையம் மூலம் விவசாயிகளுக்கு பல்வேறு வேளாண் சார்ந்த பயிற்சிகள், செயல்முறை விளக்கங்கள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்வுகள் வழங்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக சிறுகமணி வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் ராஜாபாபு வௌியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நமது வீட்டில் காய்கறி தோட்டம் அமைத்து நமக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களுடன் பலதரப்பட்ட மருத்துவ குணங்களைக் கொண்ட காய்கறிகளை நாமே உற்பத்தி செய்து வருடம் முழுவதும் காய்கறிகளை நகர மற்றும் கிராம பொதுமக்கள் பெறும் விதமாக மாடித்தோட்டம் மற்றும் வீட்டு காய்கறி தோட்டம் பற்றிய ஒரு நாள் நிலையப் பயிற்சி அக்.14ம் தேதி நடைபெற உள்ளது.

இப்பயிற்சியில் எளிய முறையில் மாடித்தோட்டம் அமைப்பது குறித்தும், வீட்டின் அன்றாட தேவைகளுக்கு ஏற்ப காய்கறி தோட்டம் அமைப்பது குறித்தும் விளக்கம் அளிக்கப்பட உள்ளது. வீட்டிலேயே தயாரிக்கப்படும் காய்கறிகளை உட்கொள்வதன் மூலம் நமது அன்றாட ஊட்டச்சத்து தேவை பூர்த்தி செய்யப்படுவதோடு ரசாயனம் இல்லாத உணவு கிடைக்கப்பெறுகிறது. ஆர்வம் உள்ளவர்கள் 04312962854, 9171717832, 8508835287 என்ற எண்ணில் அலுவலக நேரத்தில் தொடர்பு கொண்டும் அல்லது 9171717832 என்ற எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலமோ, குறுஞ்செய்தி மூலமோ முன்பதிவு செய்யவும். முன்பதிவு செய்ய கடைசி நாள் அக்.13, கலந்து கொள்ளும் நபர்களுக்கு மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்படும். மரக்கன்றுகள் பெற அடங்கல் நகல் மற்றும் ஆதார் நகல் அவசியம் கொண்டுவர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

The post சிறுகமணி வேளாண் அறிவியல் நிலையத்தில் மாடித்தோட்டம் அமைப்பது எப்படி? appeared first on Dinakaran.

Related Stories: