விழாவில் ஜாக்டோ – ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பள்ளியில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவ, மாணவிகளுக்கும், விளையாட்டு துறையில் சாதனை புரிந்த மாணவ, மாணவிகளுக்கும் பரிசு, விருது, சான்றிதழ் வழங்கினார். அப்போது அவர் மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வும் மற்றும் கல்வியின் அவசியம் குறித்து உரையாற்றினார்.
இதனைத் தொடர்ந்து மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் நாடகங்கள் நடைபெற்றது. இந்த விழாவினை ஒருங்கிணைப்பு செய்த அனைத்து ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு பள்ளியின் நிறுவனத் தலைவர் ஜி.தனராஜ் வாழ்த்து தெரிவித்தார்.
The post கிரைஸ்ட் கிங் பள்ளியில் சிறந்த மாணவர்களுக்கு விருது, சான்றிதழ்கள் appeared first on Dinakaran.