சென்னை: மாற்றுத்திறனாளிகளை அவமதித்ததாக கைது செய்யப்பட்ட பேச்சாளர் மகாவிஷ்ணுவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. பேச்சாளர் மகாவிஷ்ணுவுக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை சைதாப்பேட்டை அரசு பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகளை அவமதித்ததாக வழக்கு தொடரப்பட்டது.