குமரியில் வள்ளுவர் சிலை நிறுவி 25 ஆண்டு நிறைவு திருக்குறள் போட்டி: தமிழ் வளர்ச்சித்துறை தகவல்

சென்னை: கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை நிறுவி 25 ஆண்டுகள் நிறைவையொட்டி தமிழ் வளர்ச்சி துறை சார்பில் திருக்குறள் போட்டிகள் நடத்தப்படுகிறது. கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவு பெறுவதையொட்டி, தமிழ்நாடு அரசு சார்பில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறையால் திருக்குறள் போட்டிகள் நடத்தப்பட உள்ளது. போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நேரில் வாழ்த்தி பாராட்டு சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்க உள்ளார். அதன் விவரம் வருமாறு: திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி, கட்டுரை போட்டி, ஓவிய போட்டி, குறும்பட போட்டி, கவிதை போட்டி, செல்பி போட்டி நடத்தப்படுகிறது. போட்டியாளர்கள் தங்களது படைப்புகளை 18.12.2024-க்குள் வீடியோ, ஆடியோ, போட்டோ, டாக்மெண்ட் மற்றும் பிடிஎப் வடிவில் tndiprmhkural@gmail.com ஈமெயில் முகவரியில் அனுப்பி வைக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு tndiprmhkural@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

The post குமரியில் வள்ளுவர் சிலை நிறுவி 25 ஆண்டு நிறைவு திருக்குறள் போட்டி: தமிழ் வளர்ச்சித்துறை தகவல் appeared first on Dinakaran.

Related Stories: