×

தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியில் பொறியாளர் தின விழா

காஞ்சிபுரம்: மாமல்லபுரம் தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் பொறியாளர் தின விழா நேற்று முன்தினம் நடந்தது. கல்லூரி முதல்வர் மனுவேல் ராஜ் தலைமை தாங்கினார். கல்லூரி இயக்குநர் மணி முன்னிலை வகித்தார். இதில், பொறியாளர் தினத்தையொட்டி பொறியாளர் துறையின் தோற்றம், வளர்ச்சி, அதன் செயல்பாடுகள், பயன்பாடுகள் மற்றும் தொழில்நுட்ப துறையின் தாக்கங்கள், வேலைவாய்ப்பில் அதனுடைய நிலைப்பாடு பற்றியும், பல்வேறு துறைகள் இருந்தாலும் பொறியியல் துறையின் பங்கு மகத்தானது என்றும் பேசப்பட்டது. இதனை தொடர்ந்து, கல்லூரி மாணவ – மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில், கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் 300க்கும் மேற்பட்ட மாணவ – மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

The post தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியில் பொறியாளர் தின விழா appeared first on Dinakaran.

Tags : Engineers Day ,Thanalakshmi Srinivasan College ,Kanchipuram ,Engineer's Day ,Tanalakshmi Srinivasan College of Engineering and Technology ,Mamallapuram ,Principal ,Manuvel Raj ,Mani ,Engineer's Department ,Engineer's Day Ceremony ,Dinakaran ,
× RELATED போக்குவரத்து மாற்றத்தால் வியாபாரம்...