துணை முதல்வராக உதயநிதி பதவியேற்பு: கலைஞர் படத்துக்கு திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை

 

ஈரோடு, அக்.1: தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்-அமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார். இதையொட்டி ஈரோடு கோட்டை பகுதி சார்பில் திருநகர் காலனியில் நடந்த நிகழ்ச்சிக்கு 27-வது வார்டு கவுன்சிலர் ரா.ஜெயந்தி ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். மாநகர செயலாளர் சுப்பிரமணியம் கலந்து கொண்டு, முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

இதைத்தொடர்ந்து 27-வது வட்டத்தை சேர்ந்த மறைந்த கவுதமி மகள் ஜெயந்திக்கு கல்லூரி கட்டண உதவித்தொகை வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பகுதி துணை செயலாளர் பாலசுந்தரம், பகுதி பிரதிநிதிகள் வேலுமணி, அண்ணாதுரை, பாபு வெங்கடேஷ், மீனாட்சி சுந்தரம், வட்ட தொழிலாளர் முன்னேற்ற சங்க பொது செயலாளர் கோபால், வட்ட தி.மு.க. செயலாளர் பாலன், பிரகாஷ், ஹரிஹரன், பூபாலன் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை தமிழ்நாடு அரசு வணிகர் நலவாரிய நிர்வாக குழு உறுப்பினர் பொ.ராமச்சந்திரன் செய்து இருந்தார்.

The post துணை முதல்வராக உதயநிதி பதவியேற்பு: கலைஞர் படத்துக்கு திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை appeared first on Dinakaran.

Related Stories: