ஈரோடு, ஜன. 6: ஈரோடு மாவட்ட உழவர் சந்தைகளுக்கு வரத்தான 76.14 டன் காய்கறிகள் ரூ.29.46 லட்சத்திற்கு விற்பனையானது. ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு சம்பத் நகர்,பெரியார் நகர்,பெருந்துறை,கோபி,சத்தியமங்கலம்,தாளவாடி ஆகிய 6 இடங்களில் உழவர் சந்தைகள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், விடுமுறை தினமான நேற்று மாவட்டத்தில் உள்ள அனைத்து உழவர் சந்தைகளிலும் விவசாயிகள் காய்கறிகளை அதிகளவில் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
இதில், ஈரோடு மாநகரில் உள்ள சம்பத் நகர் உழவர் சந்தைக்கு வரத்தான 30.53 டன் காய்கறிகள் மற்றும் பழங்கள் ரூ.11 லட்சத்து 72 ஆயிரத்து 815க்கு விற்பனையானது.இதேபோல், மாவட்டம் முழுவதும் உள்ள உழவர் சந்தைகளுக்கும் மொத்தம் வரத்தான 76.14 டன் காய்கறிகள் மற்றும் பழங்கள் ரூ.29 லட்சத்து 46 ஆயிரத்து 655க்கு விற்பனையானதாக உழவர் சந்தை நிர்வாகிகள் தெரிவித்தனர்.
The post உழவர் சந்தைகளில் ரூ.29.46 லட்சத்திற்கு காய்கறிகள் விற்பனை appeared first on Dinakaran.