×

திருவெறும்பூர் அருகே தனியார் கம்பெனியில் இரும்பு திருடியவர் கைது

திருவெறும்பூர், செப்.27: திருவெறும்பூர் அருகே உள்ள கம்பெனியில் இரும்பு கம்பிகளை திருடிய தொழிலாளியை துவாக்குடி போலீசார் கைது செய்தனர். திருவெறும்பூர் அருகே துவாக்குடியில் தனியார் இன்ஜினியரிங் ஒர்க்ஸ் கம்பெனியில் ராவுத்தன்மேடு பாரதியார் தெருவை சேர்ந்த புகழேந்தி என்பவர் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் இவர் நேற்று முன்தினம் ஹாஸ்பிடல் செல்வதாக கூறி பர்மிஷன் கேட்டு கம்பெனி விட்டு வெளியே செல்ல முற்பட்டார்.

அப்போது, அவரை கம்பெனியில் உள்ள பாதுகாவலர்கள் வழக்கம்போல் பரிசோதனைக்கு உட்படுத்திய போது அவர் சட்டை மற்றும் கைலிக்குள் துண்டு துண்டுகளாக ஒன்பதரை கிலோ இரும்பு கம்பிகளை மறைத்து வைத்து எடுத்துச் சென்றது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அவரை பிடித்து துவாக்குடி போலீசில் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக கம்பெனி மேலாளர் செந்தில் துவாக்குடி போலீசில் அளித்த புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

The post திருவெறும்பூர் அருகே தனியார் கம்பெனியில் இரும்பு திருடியவர் கைது appeared first on Dinakaran.

Tags : Tiruverumpur ,Thiruverumpur ,Duvakkudi ,Pugahendi ,Rauthanmedu Bharatiyar Street ,Tiruverumpur.… ,
× RELATED களத்தில் நிற்கிறோம் வலைதளத்தில் அல்ல.. அன்பில் மகேஷ் பேட்டி