×

குப்பைகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

 

மணப்பாறை, டிச.20: மணப்பாறை பாரதியார் நகர் சாலை ஓரங்களில் கொட்டப்படும் குப்பையால் தொற்று நோய் ஏற்படும் அபாயம். திருச்சி மாவட்டம் மணப்பாறை – விராலிமலை சாலையில் உள்ள பாரதியார் நகர் பகுதி மற்றும் அரசு மருத்துவமனை எதிர்புறம் உள்ள சாலை ஓரத்தில் அதிக அளவில் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளன.

இந்த குப்பைகளை நாய்கள் மற்றும் பன்றி குட்டிகள், உணவுகளை உண்பதற்காக களைத்து விடுகின்றன. இதனால் அப்பகுதியில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது. மேலும் சாலையோரம் கொட்டப்படும் கழிவுகளால் தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே நகராட்சி நிர்வாகம் உடனே இக்குப்பைகலை சுத்தப்படுத்த வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post குப்பைகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Manapparai ,Bharathiar Nagar road ,Bharathiar Nagar ,Manapparai-Viralimalai road ,Trichy district ,Dinakaran ,
× RELATED அடிக்கடி நான்கு சக்கர வாகன நிறுத்தம் காரணமாக கடும் போக்குவரத்து பாதிப்பு