திருவெறும்பூர்: திருச்சி அடுத்த திருவெறும்பூரில் அமைச்சர் அன்பில் மகேஷ் நேற்று நிருபர்களை சந்தித்தார். அப்போது, அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் சம்பிரதாயத்திற்காக மழை வெள்ள பாதிப்பு அடைந்த பகுதிகளில் இன்று போட்டோ எடுத்து விளம்பரம் தேடிக் கொள்கின்றார் என்று விஜய் கூறியது குறித்து கேள்விக்கு அமைச்சர் கூறுகையில், ‘களத்தில் யார் வேலை பார்க்கிறார், என்பது குறித்து தமிழக மக்களுக்கு நன்றாக தெரியும்.
வெறும் சமூக வலைதளத்தில் பணியாற்றுவதை காட்டிலும், களத்தில் பணியாற்றி பார்த்தால் தான் மக்களின் பிரச்னைகள் என்ன என்பது தெரியும். முதல்வர் சிறுமழை வெள்ள பாதிப்பு என்றாலும் உடனடியாக “ரெயின்கோட்’’ அணிந்து கொண்டு களத்திற்கு சென்று நிலவரத்தை கேட்டு அறிகிறார். அதேபோல் துணை முதல்வரும் மழை வெள்ள பாதிப்பு அன்று சுமார் 2500 கிலோ மீட்டர் பயணித்து மக்களிடம் குறைகளை கேட்டு அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து தர அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இவ்வாறு அவர் கூறினார்.
The post களத்தில் நிற்கிறோம் வலைதளத்தில் அல்ல.. அன்பில் மகேஷ் பேட்டி appeared first on Dinakaran.