ஜவ்வரிசி – கால் கிலோ,
சர்க்கரை – 150 கிராம்,
பால் – கால் கப்,
ஏலக்காய் தூள் – 1 டீஸ்பூன்,
கேசரி பவுடர் – 1 சிட்டிகை,
முந்திரி – 7,
உலர்ந்த திராட்சை – 7,
நெய் – 2 டேபிள் ஸ்பூன்.
செய்முறை:
ஜவ்வரிசியை 4 மணி நேரம் ஊற வைக்கவும். ஊறியதும் தண்ணீரை வடிகட்டிவிட்டு ஜவ்வரிசியைத் தனியாக எடுத்து வைக்கவும். ஒரு வாணலியில் நெய் விட்டு முந்திரி, உலர்ந்த
திராட்சையை வறுத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி காய்ச்சவும். பால் கொதித்ததும் அத்துடன் ஊற வைத்த ஜவ்வரிசியைச் சேர்த்து 2 நிமிடங்கள் கிளறிவிடவும். அத்துடன் கேசரி பவுடர் மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்துக் கலந்துவிடவும். நன்கு கலந்துவிட்டு சர்க்கரையைச் சேர்த்துக் கிளறவும். சர்க்கரை நன்கு கலந்தவுடன், நெய் சேர்த்துக் கிளறவும். கெட்டியான பதத்திற்கு வந்ததும் நெய்யில் வறுத்த முந்திரி, உலர்ந்த திராட்சை போட்டு இறக்கவும். சுவையான, வித்தியாசமான ஜவ்வரிசி அல்வா தயார்.
The post ஜவ்வரிசி அல்வா appeared first on Dinakaran.