தேவையானவை:
பிரெட் ஸ்லைஸ் – 10,
ரவை – 1 கப்,
தயிர் – 1 கப்,
அரிசி மாவு – 3 தேக்கரண்டி,
உப்பு – தேவைக்கேற்ப,
எண்ணெய் – 100 கிராம்.
செய்முறை:
பிரெட்டின் ஓரங்களை நீக்கி, சிறியதுண்டுகளாக்கவும். அதனுடன் ரவை, தயிர், உப்பு, அரிசி மாவு, தண்ணீர் தேவையான அளவு சேர்த்து கெட்டியாக கலக்கவும். இந்தக் கலவையை அரை மணி நேரம் ஊறவிடவும். பின்பு மிக்ஸியில் போட்டு சிறிதளவு தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்துக்கு அரைத்து எடுக்கவும். தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, எண்ணெய் தடவி, மாவை தோசைகளாக வார்த்து, எண்ணெய் விட்டு இருபுறமும் வேகவைத்து பொன்னிறமாக எடுக்கவும். மண மணக்கும் தோசை தயார்.
The post பிரெட் தோசை appeared first on Dinakaran.
