மேகி எக் நூடுல்ஸ்

தேவையான பொருட்கள்

4மேகி நூடுல்ஸ் (10ரூ)

4 முட்டை

1நறுக்கிய வெங்காயம்

1டேபிள்ஸ்பூன் நறுக்கிய பூண்டு

1/2நறுக்கிய தக்காளி

1/2நறுக்கிய குடைமிளகாய்

1டீஸ்பூன் சோயா சாஸ்

1டீஸ்பூன் தக்காளி சாஸ்

1/2டீஸ்பூன் மிளகுத்தூள்

உப்பு

2டேபிள்ஸ்பூன் எண்ணெய்

செய்முறை:

நூடுல்ஸ்சை இரண்டு நிமிடம் சுடுதண்ணீரில் போட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்… ஒரு கடாயில் எண்ணெய் விட்டு நறுக்கிய பூண்டு வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கவும் பின்பு தக்காளி குடமிளகாய் சேர்த்து 2 நிமிடம் மிதமான தீயில் வதக்கவும்.பின்பு உடைத்த முட்டையை சேர்த்து மிதமான தீயில் நன்றாக வதக்கவும்… முட்டை பொரிந்தவுடன் அதில் மிளகுத்தூள் உப்பு சேர்த்து கிளறிக் கொள்ளவும். இப்போது வேகவைத்த நூடுல்ஸ் உடன் சோயா சாஸ் தக்காளி சாஸ் மேகி மசாலா கலந்து அனைத்தும் ஒன்றோடு ஒன்று கலக்கும் வரை கிளறி இறக்கவும்…

The post மேகி எக் நூடுல்ஸ் appeared first on Dinakaran.