தேவையான பொருட்கள்
சின்ன வெங்காயம் – 100 கிராம்
காய்ந்த மிளகாய் – 7
பூண்டு – 10 பல்
புளி – கோலி குண்டு அளவு
தக்காளி – 2
துருவிய தேங்காய் – 1 கப்
நல்லெண்ணெய் – ஒரு குழி கரண்டி
கடுகு – 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை – ஒரு கொத்து
உளுந்து & கடலைப் பருப்பு – 1 டீஸ்பூன்
பெருங்காயம் – 1/4 டீஸ்பூன்
செய்முறை :
சின்ன வெங்காயம், காய்ந்த மிளகாய், பூண்டு, புளி, தக்காளி, தேங்காய் ஆகியவற்றை மிக்ஸி ஜாரில் சேர்த்து கொரகொரவென்று அரைத்துக் கொள்ளவும். ஒரு கிண்ணத்தில் ஊற்றவும்.
அடுப்பில் தாளிக்கும் கரண்டி வைத்து நல்லெண்ணெய் சேர்த்து கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு, பெருங்காயம் மற்றும் கறிவேப்பிலை தாளித்து கொட்டவும். சுவையான பச்சை வெங்காய சட்னி தயார்.
The post பச்சை வெங்காய சட்னி appeared first on Dinakaran.
