தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அளித்த பேட்டியில், ‘‘திருமாவளவன் பொதுநல நோக்கத்தோடு மது ஒழிப்பு மாநாடு நடத்துகிறோம் என்று சொல்லி இருக்கிறார். இது வரவேற்கத்தக்கது. ஆனால் அதிமுக என்பது மிகப்பெரிய இயக்கம். எனவே எங்கள் கட்சிக்கு என்று ஒரு வரைமுறை இருக்கிறது. எனவே நேரடியாக சந்தித்து, இந்த மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுத்தால் அதுபற்றி பொதுச்செயலாளர் முடிவு செய்வார்.
மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கை என்பது மக்கள் பிரச்னைகளுக்காக போராடுவது. தற்போது அந்த கட்சியினர் போராடுவதையே மறந்துவிட்டனர்’’ என்றார். தொடர்ந்து ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அண்ணா தொழிற்சங்கப் பேரவையின் 50வது ஆண்டு தொடக்க விழா கொண்டாடப்பட்டது. சென்னை மாவட்ட அண்ணா ஆட்டோ ஓட்டுநர்களில் மூத்த உறுப்பினர்கள் 50 பேருக்கு சீருடைகள் வழங்கப்பட்டன.
The post விசிக மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்பா? திருமாவளவன் நேரில் வந்து கூப்பிட்டால் எடப்பாடி அதுபற்றி முடிவெடுப்பார்: ஜெயக்குமார் பேட்டி appeared first on Dinakaran.