அண்ணாநகர்: கோயம்பேடு 100 அடி சாலையில் கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதியதில் 4 பேர் படுகாயமடைந்தனர். மேலும், ஆட்டோ, கார், சரக்கு வேன், பைக் உள்ளிட்ட 8 வாகனங்கள் சேதமடைந்தன. தண்டையார்பேட்டையை சேர்ந்த சுரேஷ் (47) என்பவர், கிண்டியில் இருந்து கோயம்பேடு நோக்கி நேற்று முன்தினம் நள்ளிரவு கான்கிரீட் கலவை லாரியை ஓட்டிச் சென்றார். கோயம்பேடு 100 அடி சாலை அருகே சென்றபோது லாரியின் பிரேக் பழுதானதால், கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் அங்கும், இங்குமாக ஓடியது. அப்போது, சாலையோரம் நிறுத்தியிருந்த 2 கார்கள், 2 பைக், மினிவேன், 2 ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் மீது மோதி நின்றது. இதில், 8 வாகனங்கள் நொறுங்கியது. மேலும், வாகனத்தில் அருகே நின்றிருந்த 4 பேர் காயமடைந்தனர். தகவலறிந்து வந்த கோயம்பேடு போக்குவரத்து போலீசார், படுகாயமடைந்த 4 பேரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், லாரி டிரைவர் சுரேஷை கைது செய்தனர்.
The post கோயம்பேடு 100 அடி சாலையில் லாரி மோதி 4 பேர் படுகாயம்: 8 வாகனங்கள் சேதம் appeared first on Dinakaran.