நகரமைப்பு பிரிவு தொடர்பான கூர்ந்தாய்வு சேவைகள் 28ம் தேதி வரை நிறுத்தம்: மாநகராட்சி அறிவிப்பு

 

சென்னை, ஜூலை 25: சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை: பெருநகர சென்னை மாநகராட்சியில் இணையவழி சேவைகளின் பயன்பாடுகள் சேவைகளின் பாதுகாப்பு, கிடைக்கும் தன்மை அளவிடுதல் ஆகியவற்றை நவீனப்படுத்தி, மேம்படுத்தும் நோக்கில் பெருநகர சென்னை மாநகராட்சியின் சேவையகங்களை மாநில தரவு மையத்திற்கு இடம் பெயர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளது. இதனையொட்டி, பெருநகர சென்னை மாநகராட்சியின் நகரமைப்புப் பிரிவு தொடர்பான கூர்ந்தாய்வு சேவைகள் நாளை சனிக்கிழமை காலை 6 மணி முதல் வரும் 28ம் தேதி திங்கட்கிழமை காலை 6 மணி வரை நிறுத்தம் செய்யப்படவுள்ளது.

The post நகரமைப்பு பிரிவு தொடர்பான கூர்ந்தாய்வு சேவைகள் 28ம் தேதி வரை நிறுத்தம்: மாநகராட்சி அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: