சென்னை, ஜூலை 26: சாலிகிராமம் திருவள்ளுவர் தெருவில் உள்ள ஒரு வீட்டில் பாலியல் தொழில் நடப்பதாக வந்த புகாரின் பேரில், விபசார தடுப்பு பிரிவு-1 இன்ஸ்பெக்டர் ராஜலட்சுமி தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் அந்த வீட்டிற்குள் புகுந்து சோதனை நடத்தினர். அதில் சூளைமேடு பகுதியை சேர்ந்த மகாலட்சுமி (33) என்பவர், தனது ஆண் நண்பருடன் இணைந்து பாலியல் தொழில் செய்து வந்தது தெரியவந்தது.
மகாலட்சுமி, வீட்டை மாதம் ரூ.30 ஆயிரத்திற்கு வாடகைக்கு எடுத்து தொழில் செய்து வந்தது தெரியவந்தது. அவரிடம் இருந்து 2 இளம்பெண்கள் மீட்டகப்பட்டனர். அதேநேரம் மகாலட்சுமிக்கு வீட்டை வாடகைக்கு விட்ட உரிமையாளருக்கு சொந்தமாக அப்பகுதிகளில் 40க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக கடந்த 3 மாதங்களில் விருகம்பாக்கம், சாலிகிராம், கோயம்பேடு, வளசரவாக்கம், வடபழனி பகுதிகளில் 10க்கும் மேற்பட்ட பாலியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் 10 நைஜீரியர்கள் உட்பட 20க்கும் மேற்பட்ட பாலியல் புரோக்கர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அந்த 10 வழக்குகளிலும் பாலியல் தொழில் நடத்த பயன்படுத்திய வீடுகள், மகாலட்சுமிக்கு வீட்டை வாடகைக்கு விட்ட உரிமையாளருக்கு சொந்தமானது என விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால் போலீசார் தொடர்ச்சியாக சட்டவிரோத செயலுக்கு தெரிந்தே வீடுகளை அதிக விலைக்கு வாடகைக்கு விட்டு வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால் சம்பந்தப்பட்ட வீட்டின் உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்ய விபரச்சார தடுப்பு பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளனர்.
The post பாலியல் தொழில் செய்த பெண் புரோக்கர் கைது: தொடர்ந்து வீடுகளை வாடகைக்கு விட்ட உரிமையாளர் மீதும் வழக்கு பாய்கிறது appeared first on Dinakaran.
