விவசாயம், பொதுமக்களுக்கு பயன்படும் பால்குளம் ரூ.90 லட்சம் செலவில் சீரமைப்பு


நாகர்கோவில்: நாகர்கோவில் மாநகராட்சிக்கு பகுதிக்கு உட்பட்ட தெங்கம் புதூர் பகுதியில் பால்குளம் உள்ளது. இந்த பால்குளத்தில இருந்து புத்தளம் பகுதியில் உள்ள வயல்பரப்புகள் பயன்பெற்று வருகிறது. மேலும் பொதுமக்களும் குளித்து வருகின்றனர். விவசாயம், மற்றும் பொதுமக்களுக்கு பயன்பெற்று வரும் இந்த குளம் ரூ.90 லட்சம் செலவில் சீரமைக்கப்படவுள்ளது. இதனைத் தொடர்ந்து இந்த குளத்தை நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் ஆய்வு செய்தார்.

இந்த குளத்தில் தேவையான இடங்களில் தடுப்புச் சுவர்கள் அமைத்தும், படித்துறைகள் அமைத்தும் குளம் மற்றும் நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும் என மேயர் தெரிவித்தார். தொடர்ந்து அந்தப் பகுதியில் இருந்த நூலகத்தை ஆய்வு செய்த மேயர் மகேஷ், நூலகத்தை மேம்பாடு செய்து, மின் வசதி செய்து கொடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இது குறித்து மேயர் மகேஷ் கூறியதாவது:

நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் உள்ள சூரியகுளம், சுப்பையார்குளம், நீராழிகுளம் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தது. இந்த குளங்களை மாநகராட்சி மூலம் தூர்வாரி, பராமரிப்பு செய்து சுற்றுசுவர் கட்டிகொடுக்கப்பட்டது. இதனால் தற்போது குளத்தில் நல்ல தண்ணீர் கிடக்கிறது. குளத்தை பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். தண்ணீர் அதிகமாக இருப்பதால் நிலத்தடி நீரும் அதிகரித்து வருகிறது. 52வது வார்டில் உள்ள பால்குளம் பராமரிப்பு பணிக்காக ரூ.90 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த குளத்தை பராமரிப்பு செய்து முடிக்கும்போது தற்போதில் இருந்து அதிக அளவு குளத்தில் தண்ணீர் பிடிக்கும். இதனால் விவசாயிகளும், பொதுமக்களும் பயன்பெறுவார்கள். என்றார். இந்த ஆய்வின்போது கவுன்சிலர்கள் ஐயப்பன், ரமேஷ், ஜெயவிக்ரமன், மாநகர் நல அதிகாரி டாக்டர் ராம்குமார், நகர திட்டமிடல் ஆய்வாளர் துர்காதேவி, இளநிலை பொறியாளர் ராஜா, சுகாதார அலுவலர் ராஜா, ராஜாக்கமங்கலம் ஒன்றிய திமுக செயலாளர் லிவிங்ஸ்டன், பகுதி செயலாளர் ஜீவா, வட்ட செயலாளர் குணசேரகன், திமுக இளைஞரணி அமைப்பாளர் அகஸ்தீசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

 

The post விவசாயம், பொதுமக்களுக்கு பயன்படும் பால்குளம் ரூ.90 லட்சம் செலவில் சீரமைப்பு appeared first on Dinakaran.

Related Stories: