விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர் பெயர் சின்னம் பொருத்தும் பணி துவங்கியது!

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வருகின்ற ஜூலை 10ம் தேதி நடைபெற உள்ளது. திமுக சார்பில் அன்னியூர் சிவா, பாமக சார்பில் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி டாக்டர் அபிநயா, மற்றும் பிற கட்சி வேட்பாளர்கள், சுயேட்சைகள் என மொத்தம் 29 பேர் போட்டியிடுகின்றனர். விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கு மொத்தம் 276 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. வாக்காளர்கள் வாக்களிப்பதற்காக 331 வாக்குப்பதிவு இயந்திரம், 357 கட்டுப்பாட்டு இயந்திரம், 1019 விவி பாட் கருவி, பயன்படுத்தப்படுகிறது. மேலும், கூடுதலாக 150 வாக்குப்பதிவு கருவிகள் தயாராக வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்தில் இன்று தேர்தல் அலுவலர்கள் மற்றும் வேட்பாளர்கள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர்கள் பெயர் மற்றும் சின்னங்கள் பொருத்தும் பணி நடந்தது. இதனை தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியருமான பழனி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 29 வேட்பாளர்கள் போட்டியிடுவதால் 2 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. வாக்கு பதிவு இயந்திரத்தில் முதலிடத்தில் உதயசூரியன் சின்னத்தில் அன்னியூர் சிவா, இரண்டாவது இடத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் டாக்டர் அபிநயா, மூன்றாவது இடத்தில் பாமக வேட்பாளர் சி.அன்புமணி ஆகியோர் பெயர் இடம் பெற்றுள்ளது.

 

The post விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர் பெயர் சின்னம் பொருத்தும் பணி துவங்கியது! appeared first on Dinakaran.

Related Stories: