நீட் முறைகேடு – குஜராத் பள்ளி உரிமையாளர் கைது

காந்திநகர்: நீட் தேர்வு வினாத்தாள் முறைகேடு தொடர்பாக குஜராத் மாநிலம் கோத்ராவில் உள்ள தனியார் பள்ளி உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். கோத்ரா அருகே ஜெய் ஜலராம் பள்ளியில் மே 5-ல் நடந்த நீட் தேர்வில் முறைகேடு நடந்தது சிபிஐ விசாரணையில் தெரியவந்தது. நீட் முறைகேடு தொடர்பாக இதுவரை குஜராத் போலீசார் 5 பேரை கைது செய்துள்ளனர்; 6-வதாக தீக்சித் படேல் கைது செய்யப்பட்டுள்ளார். நீட் தேர்வில் தேர்ச்சி அடையச் செய்ய 27 மாணவர்களிடம் தலா ரூ.10 லட்சம் கேட்டதாக பள்ளி உரிமையாளர் தீக்சித் மீது புகார் எழுந்தது. நீட்-ல் அதிக மதிப்பெண் பெற ஜெய் ஜலராம் பள்ளியை தேர்வு மையமாக தேர்வு செய்யுமாறு கேட்டுக் கொண்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

The post நீட் முறைகேடு – குஜராத் பள்ளி உரிமையாளர் கைது appeared first on Dinakaran.

Related Stories: