அசாம், அருணாச்சலப் பிரதேசத்தில் வெளுத்து வாங்கும் மழை: கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 8 பேர் உயிரிழப்பு

அசாம்: வடகிழக்கு மாநிலங்களான அசாம் மற்றும் அருணாசலப்பிரதேசத்தில் மழை வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் பொதுமக்களை மீட்கும் பணிகளில் இந்திய ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்திருக்கும் நிலையில் வட மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் மழையின் தீவிரம் அதிகரித்துள்ளது. அந்த வகையில் கனமழையின் தாக்கம் மற்றும் வெள்ளபெருக்கு காரணமாக அசாமில் இதுவரை 46பேர் உயிரிழந்திருப்பதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 8 பேர் உயிரிழந்துள்ளார். கனமழை வெள்ளத்தால் 16 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வெள்ளத்தால் சூழப்பட்ட காசிரங்கா பூங்காவில் 11 விலங்குகள் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் 50க்கும் மேற்பட்ட விலங்குகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளன. இதே போல் மழை வெள்ளம் காரணமாக அருணாசல பிரதேசத்தில் 60 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்னனர். இரு மாநிலங்களிலும் வெள்ளத்தால் சிக்கி தவிக்கும் மக்களை மீட்கும் நடவடிக்கையில் இந்திய ராணுவம் களமிறங்கியுள்ளது. அந்த வகையில் அசாமின் தேமேஜி மாவட்டம் மற்றும் அருணாசலப்பிரதேசத்தின் கிழக்கு சியாங் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களை இந்திய ராணுவத்தினர் மீட்டு முகாம்களில் தங்கவைத்துள்ளனர்.மீட்கப்பட்டவர்கள் பாதுகாப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டு நிவாரண பணிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

The post அசாம், அருணாச்சலப் பிரதேசத்தில் வெளுத்து வாங்கும் மழை: கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 8 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Related Stories: