தேர்தல் தோல்வி எதிரொலி: ராஜஸ்தான் அமைச்சர் கிரோடி லால் மீனா திடீர் ராஜினாமா


ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநில வேளாண்மை, தோட்டக்கலை, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கிரோடி லால் மீனா திடீர் ராஜினாமா செய்தார். தான் பிரச்சாரம் செய்த மக்களவை தொகுதிகளில் பாஜக தோல்வியுற்றால் பதவியை ராஜினாமா செய்வதாக கிரோடி லால் கூறியிருந்தார். 72 வயதான அமைச்சர் கிரோடி லால் பிரச்சாரம் செய்த 7 மக்களவை தொகுதிகளில் 4-ல் பாஜக தோல்வி அடைந்தது. கிரோடி லால் சொந்த தொகுதியான தவுசாவிலும் பாஜக தோல்வியடைந்தது. தான் பிரச்சாரம் செய்த 7 தொகுதிகளில் 4-ல் பாஜக தோல்வி அடைந்ததை அடுத்து கிரோடி அலுவலகத்துக்கு வராமல் இருந்தார்.

கிரோடி லால் அலுவலகத்துக்கு வராததால் அவர் துறை சார்ந்த பட்ஜெட் திட்டங்களை இறுதி செய்வதில் தாமதம் ஆனது. நான் விடுத்த சவால் விடுத்தது தான் என்று கூறியிருந்த கிரோடி லால் விரைவில் ராஜினாமா செய்வேன் என அறிவித்திருந்தார். அமைச்சர் கிரோடி லால் மீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டதாக அவர் உதவியாளர் தற்போது அறிவித்துள்ளார். 10 நாட்களுக்கு முன்பே தனது ராஜினாமா கடிதத்தை கிரோடி லால் மீனா கொடுத்துவிட்டதாக அவரது உதவியாளர் தெரிவித்தார்

The post தேர்தல் தோல்வி எதிரொலி: ராஜஸ்தான் அமைச்சர் கிரோடி லால் மீனா திடீர் ராஜினாமா appeared first on Dinakaran.

Related Stories: