டி20 உலக கோப்பை வென்ற இந்திய அணிக்கு ரூ.125 கோடி பரிசுத் தொகையை அறிவித்தார் பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா!

மும்பை: டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ரூ.125 கோடி பரிசுத்தொகையை பிசிசிஐ அறிவித்துள்ளது. ரூ.125 கோடி பரிசுத் தொகை தரப்படும் என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா எக்ஸ் தளத்தில் அறிவித்துள்ளார். “டி20 உலகக்கோப்பை தொடர் முழுவதும் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. வீரர்கள், பயிற்சியாளர்கள், ஆதரவாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்” என ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.

பார்படாஸில் நேற்று நடைபெற்ற இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 இறுதிப் போட்டியில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வென்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.

டி20 உலகக் கோப்பை தொடர் அறிமுகமான 2007ம் ஆண்டு இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இதையடுத்து டி20 உலகக் கோப்பையை வெல்ல முடியாமல் இந்திய அணி தவித்து வந்த நிலையில் நேற்றைய இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்தியதன் மூலம் 17 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி 2வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது.

இந்நிலையில் டி20 உலக கோப்பை வென்ற இந்திய அணிக்கு ரூ.125 கோடி பரிசுத் தொகையை பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது; “2024 ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு 125 கோடி ரூபாய் பரிசுத் தொகையை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

போட்டி முழுவதும் அந்த அணி சிறந்த திறமை, உறுதிப்பாடு மற்றும் விளையாட்டுத்திறனை வெளிப்படுத்தியுள்ளது. இந்த சிறந்த சாதனைக்காக அனைத்து வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் துணை ஊழியர்களுக்கு வாழ்த்துக்கள்” என தெரிவித்துள்ளார்.

The post டி20 உலக கோப்பை வென்ற இந்திய அணிக்கு ரூ.125 கோடி பரிசுத் தொகையை அறிவித்தார் பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா! appeared first on Dinakaran.

Related Stories: