இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வரும்போது அக்னி வீர் திட்டம் நீக்கப்படும்: மக்களவையில் அகிலேஷ் யாதவ் உரை

டெல்லி: இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வரும்போது அக்னி வீர் திட்டம் நீக்கப்படும் என்று மக்களவையில் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ்; ஒன்றிய பாஜக கூட்டணி அரசு நீண்ட நாட்களுக்கு நீடிக்காது என்று மக்கள் நினைக்கின்றனர். எந்த பந்தமும் இல்லாத கட்சிகள் ஒன்று சேர்ந்து ஆட்சியை கைப்பற்றியுள்ளன.

தேர்வு வினாத்தாள்கள் கசிவது ஏன் தெரியுமா? நீட் வினாத்தாள் கசிவில் சம்பந்தப்பட்டவர்கள் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இளைஞர்களின் வேலைவாய்ப்புகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுக்கக் கூடாது என்பதற்காக முன்னதாக அரசே திட்டமிட்டு இதை செய்கிறது என்பதே உண்மை. நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது. விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்கும் திட்டம் குறித்து ஜனாதிபதி உரையில் எந்த தகவலும் இல்லை.

எந்த ஒற்றுமையும் இல்லாத கட்சிகள் இணைந்து ஆட்சியை கைப்பற்றியுள்ளன. அக்னிவீர் திட்டம் நீக்கப்பட வேண்டும். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வரும்போது அக்னி வீர் திட்டம் நீக்கப்படும். நாடு முழுவதும் சமூக நீதிக்காக சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம் என்று கூறினார்.

 

The post இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வரும்போது அக்னி வீர் திட்டம் நீக்கப்படும்: மக்களவையில் அகிலேஷ் யாதவ் உரை appeared first on Dinakaran.

Related Stories: