கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடிப் பேரை வறுமையிலிருந்து மீட்டுள்ளோம்: பிரதமர் மோடி பேச்சு


டெல்லி: குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி பதிலுரை அளித்து வருகிறார். பிரதமர் மோடியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முழக்கமிட்டு வருகின்றனர். எதிர்க்கட்சியினர் அமைதியாக இருக்குமாறு சபாநாயகர் ஓம் பிர்லா கோபத்துடன் கூறினார். எதிர்க்கட்சிகள் முழக்கத்தால் சிறிதுநேரம் தனது உரையை மோடி நிறுத்தினார்.

மோடி பேசும் போது மணிப்பூர் மணிப்பூர் என எதிர்க்கட்சிகள் முழக்கம். எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்தபோது மக்கள் தங்களை தேர்ந்தெடுத்ததாக மோடி பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எதிர்க்கட்சிகள் கண்டன முழக்கத்துக்கு இடையே பிரதமர் மோடி தொடர்ந்து பேசி வருகிறார்.

மக்களவையில் பிரதமர் மோடி பேசி கொண்டிருக்கும்போது எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அவை மையப்பகுதியில் கூடி முழக்கமிட்டு வருகின்றனர். மணிப்பூர் குறித்து விளக்கமளிக்கக் கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர் முழக்கமிட்டு வருகின்றனர். மணிப்பூருக்கு நீதி வழங்குக மணிப்பூருக்கு நீதி வழங்குக என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர் முழக்கம்.

நீட் தேர்வால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் நீட் முறைகேடு வெட்கக் கேடானது என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர் முழக்கம். எதிர்க்கட்சி எம்.பி.க்கள் எழுந்து நின்று முழக்கம் எழுப்பி வரும்போதும் எதிர்க்கட்சி தலைவர் ராகுல், பிரதமரின் உரையை கேட்டு வருகிறார்.

2014ஆம் ஆண்டுக்கு முன்பு, இந்த நாடு முன்னேறாது என்றுதான் நாட்டு மக்கள் நினைத்திருந்தார்கள். ஊழலுக்கு எதிரான சகிப்பின்மை கொள்கையால்தான் நாட்டு மக்கள் எங்களை மீண்டும் ஆட்சிக்குக் கொண்டு வந்துள்ளனர். வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்க கடுமையாக உழைக்கத்தயார், கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடிப் பேரை வறுமையிலிருந்து மீட்டுள்ளோம் என்றார்.

மேலும், செயல்படுத்த முடியாத அனைத்தையும் நாங்கள் செயல்படுத்திக் காட்டியிருக்கிறோம். காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் ஒரு ஊழலை மறைக்க மற்றொரு ஊழல் நடந்துள்ளது. 2014ஆம் ஆண்டிற்கு முன்பு இந்தியர்கள் தன்னம்பிக்கையை இழந்துவிட்டிருந்தனர் என்று மோடி கூறினார்.

முன்னதாக, உரையைத் தொடங்கிய பிரதமர் மோடி, எதிர்க்கட்சியினரின் பேச்சுக்கு வரவேற்பு தெரிவிப்பதாகக் கூறினார். மேலும், மூன்றாவது முறையாக தேசத்தின் மக்கள் எங்களுக்கு வாக்களித்து எங்களை தேர்வு செய்திருக்கிறார்கள். நாங்கள் எப்படி திறம்பட பணியற்றினோம் என்று மக்களுக்குத் தெரியும், தேசத்தின் மக்கள் எங்களுக்குத்தான் வாக்களித்துள்ளார்கள். ஏழைகள் நலனுக்காக நங்கள் செயல்பட்டதற்கு மக்கள் எங்களுக்கு அங்கீகாரம் அளித்துள்ளனர்.

மக்களவைத் தேர்தலில் தோல்வியடைந்த எதிர்க்கட்சிகள் பிதற்றுவது கண்கூடாகத் தெரிகிறது. 10 ஆண்டுகளில் வறுமை ஒழிக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் மோடி கூறினார். மதச்சார்பின்மைக்கே மக்கள் வாக்களித்துள்ளனர். எதிர்க்கட்சி உறுப்பினர்களை ராகுல் காந்தி தூண்டிவிடுகிறார். வாக்கு வங்கி அரசியல் தேசத்தை சீர்குலைத்துவிட்டது. அனைவரையும் உள்ளடக்கி, அனைவருக்கான வளர்ச்சி என்பதே எங்கள் கொள்கை என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

The post கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடிப் பேரை வறுமையிலிருந்து மீட்டுள்ளோம்: பிரதமர் மோடி பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: